சமூக செயல்பாட்டாளரான நடிகை கஸ்தூரி இன்று( ஆகஸ்ட் 15) சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் , நடிகை கஸ்தூரி மற்றும் நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும், இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
Comments are closed.