Rock Fort Times
Online News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் எஸ்வி சேகர்…! (வீடியோ இணைப்பு)

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று(01-03-2025) 72-வது பிறந்தநாள் ஆகும். அவருக்கு சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் பிரபல நடிகர் எஸ்.வி.சேகரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு 2026லும் தாங்கள்தான் முதலமைச்சராக வரப்போகிறீர்கள் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும், சென்னை மந்தைவெளிப் பாக்கம் ஐந்தாவது டிரஸ்ட் தெருவுக்கு தனது தந்தை எஸ்.வி.வெங்கட்ட ராமன் பெயரை சூட்டியமைக்கும், இதற்காக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் எஸ்.வி. சேகரின் மகனும், நடிகருமான அஸ்வின் சேகரும் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்