தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக கலக்கி வந்தவர் ஜூனியர் பாலையா. மறைந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகனான ஜூனியர் பாலையா 1975 ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடந்து கரக்காட்டகாரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், இன்று ( 02.11.2023 ) காலை காலமானார். அவருக்கு வயது 70. ஜூனியர் பாலையாவின் மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜூனியர் பாலையாவின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.