திருச்சி, நவல்பட்டில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை-* அமைச்சர் முத்துசாமியிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தல்…!
சென்னை தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமியை, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேலான சாமானிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கிறது. அதை நிறைவேற்றிடும் வகையில் நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் குறைந்தபட்சம் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித் தர ஆவண செய்யுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது

Comments are closed.