திருச்சி மாவட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், மியான்மர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 179 பேர் தங்கியுள்ளனர். சுற்றுலா, கல்வி மற்றும் இதர விசாக்களைப் பெற்று தங்கியுள்ள இவர்களில் 64 பேரின் விசா காலம் முடிந்தும் தங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. விசா காலம் முடிந்து தங்கியுள்ளவர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில், விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது சட்டப்படி தவறு.தொடர்ந்து இந்தியாவில் தங்க விரும்புபவர்கள் எஃப்ஆர்ஆர்ஓ இணையதளத்தில் விசாவை புதுப்பிக்க வேண்டும், சொந்த நாட்டுக்குச் செல்வோர் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கு அதே இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்யாமல் இருக்கும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.
Comments are closed.