கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை: திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் விருது…!
தமிழ்நாடு உறுப்பு மாற்று வாரியத்தின் சார்பில், உடல் உறுப்பு தான தின நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்ததற்கான விருது வழங்கப்பட்டது. இதற்கான விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்க, திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் பொது மேலாளர் மற்றும் யூனிட் தலைமை அதிகாரி ஜெயராமன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் விஜய் கணேசன், டாக்டர் குமரகுருபரன் ஆகியோர் அதனை பெற்றுக் கொண்டனர். இறந்து போன நபர் ஒருவரின் கல்லீரலை இன்னொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தியதில் தமிழக அரசின் பரிசை திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று வாரியத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments are closed.