Rock Fort Times
Online News

திருச்சி- புதுக்கோட்டை சாலையில் விபத்து: கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற பெண் காவலர் பலி…!

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் பள்ளத்துபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி விமலா( வயது 28).  இவர், மண்டையூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இன்று(28-11-2024) காலை அவர் திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் சாலையில்  ஸ்கூட்டரில் சென்றபோது அவர் மீது கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த விமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மண்டையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்த கார் டிரைவர் வெனின்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நிறைமாத கர்ப்பிணியான விமலா, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்