திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது40), இவர் தனது நண்பரான மண்ணசச்நல்லூர், எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணனுடன் (34) இருசக்கர வாகனத்தில் திருச்சி- மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே கோபிகிருஷ்ணன் உயிரிழந்தார். சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இனாம் மணியாச்சியை சேர்ந்த ராஜ் அழகு மதன் (28) என்பவர் மீது வழக்கு பதிந்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.