திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – * 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்…!
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் இன்று( ஜூலை 1) கூத்தூர் பாலம் மீது சென்று கொண்டிருந்த மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு ள்ளாயின. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி நிலை தடுமாறி அருகே வந்த மினி லாரி மீது மோதியது. இதில் லாரி மற்றும் கல்லூரி பேருந்து பலத்த சேதம் அடைந்தது. பேருந்தில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரியின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக சென்னை பைபாஸ் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும், படுகாயம் அடைந்த லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.
Comments are closed.