பண்டிகை காலங்களை முன்னிட்டு ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 குறைக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆவின் இயக்குநர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர், பன்னீர், ஐஸ்கிரீம் மற்றும் நறுமண பால் வகைகளை 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்து வருகிறது. மேலும், பால் உபபொருட்களின் விலையிலும் தரத்திலும் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பண்டிகை காலங்களில் பொதுமக்களிடையே ஆவின் பால் உபபொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய் எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று ( 02.12.2023 ) முதல் ஜனவரி 20ம் தேதி வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யை பெற்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.