Rock Fort Times
Online News

ஆடிப்பெருக்கு நாளை எந்தெந்த இடங்களில் கொண்டாடலாம்…!

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் இன்று ( 02.08.2023 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ;

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் :

தொட்டியம் வட்டம் – உன்னியூர், பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளி பாளையம், ஸ்ரீராமசமுத்திரம், சீலைப்பிள்ளையார்புத்தூர், காடுவெட்டி, நத்தம், எம். புத்தூர் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு), அரசலூர் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்), சீனிவாசநல்லூர் ( மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூர் சத்திரம், மணமேடு, முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை)

முசிறி வட்டம் – முசிறி மேற்கு காவேரி பாலம், சந்தபாளையம் பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்) அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம்

ஸ்ரீரங்கம் வட்டம்- பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை), முக்கொம்பு, கம்பரசம்பேட்டை (தடுப்பணை), முருங்கப்பேட்டை, முத்தரசநல்லூர் அக்ரஹாரபடித்துறை, பளூர் படித்துறை, அல்லூர் மேலத்தெரு படித்துறை, திருச்செந்துறை வெள்ளாளர் தெரு படித்துறை, அந்தநல்லூர் படித்துறை, திருப்பராய்துறை துலாஸ்தானம், மேலூர் அய்யனார்படித்துறை, கீதாபுரம் படித்துறை, அம்மாமண்டபம் படித்துறை, கருடமண்டபம் படித்துறை, பஞ்சக்கரை படித்துறை, பனையபுரம் படித்துறை, உத்தமர்சீலி நடுவெட்டி படித்துறை, கிளிக்கூடு படித்துறை.

மண்ணச்சநல்லூர் வட்டம்- கரியமாணிக்கம் மேற்கு கிராமம், வாத்தலை, கரியமாணிக்கம் கிழக்கு கிராமம் – சிறுகாம்பூர், திருவாசி கிராமம் துடையூர் களிங்காயிகோவில், மாதவ பெருமாள் கோவில் கிராமம் – நொச்சியம் மான்பிடி மங்களம், பிச்சாண்டார் கோவில் கிராமம் – அய்யன் வாய்க்கால்.

திருவெறும்பூர் வட்டம் – வேங்கூர் பூச படித்துறை, பனையக்குறிச்சி படித்துறை, கீழ முல்லக்குடி படித்துறை, ஒட்டக்குடி படித்துறை.

லால்குடி வட்டம் – கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால் அப்பாத்துரை கிராமம், கொள்ளிடம் ஆறு – கூகூர், அரியூர் (செங்கரையூர் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூர் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி.
ஆடி 18 மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட  வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்