Rock Fort Times
Online News

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த திருவாரூரைச் சேர்ந்த இளம்பெண் கைது…!

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாலாஜி.  இவரது மனைவி மைதிலி (47). இந்த தம்பதி அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், ஆபிஸர் காலனியில் 9 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இங்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், விக்ரவாண்டியம் கிராமத்தைச் சேர்ந்த சௌமியா (24) என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்தநிலையில், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மருத்துவர் மைதிலியை அணுகி ஏடிஎம்.கார்டு, ஜி.பே ஆகியவற்றின் மூலம் பணத்தை கட்ட சொல்லாமல் நேரில் கொடுக்குமாறு கூறுவதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மைதிலி வரவு- செலவு கணக்குகளை ஆடிட்டர் மூலம் சரி பார்த்துள்ளார். அப்போது சௌமியா, பல நோயாளிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு புத்தகத்தில் பதிவு செய்யாமல் கையாடல் செய்துள்ளார். அத்துடன் மருத்துவமனையில் ஜி-பே வேலை செய்யவில்லை எனக்கூறி, சௌமியா தனது வங்கி கணக்கிற்கு ஜி-பே மூலம் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். இவ்வாறு கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் வரை சௌமியா ரூ.52 லட்சம் கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகத்தில் மைதிலி புகார் அளித்தார். ஆணையர் சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  ஆவண நம்பிக்கை மோசடி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கண்ணம்மாபேட்டை சிஐடி நகர், பாரதி தெருவில் தலைமறைவாக இருந்த சௌமியாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்