திருச்சி, பஞ்சப்பூர் புது பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த திருநங்கை மீது பேருந்து ஏறியதில் உடல் நசுங்கி பலி…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை பன்னாங்கொம்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் லாவண்யாஸ்ரீ (வயது 27). திருநங்கையான இவர் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் முதல் நுழைவாயில் அருகில் பார்க்கிங் பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது அவரது அருகில் ஒரு தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தது. திருநங்கை தூங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காத அந்த பேருந்தின் டிரைவர் பேருந்தை இயக்கினார். அப்போது அந்தப் பேருந்து, திருநங்கை மீது ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திருநங்கையை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ் வழக்குப்பதிந்து தனியார் பேருந்து டிரைவர் குளித்தலையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்தார். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கடந்த 16ம் தேதி தான் பயன்பாட்டுக்கு வந்தது. இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில் திருநங்கை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.