Rock Fort Times
Online News

சாலை விபத்தில் வாலிபர் பலி…

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நெடுங்கூரில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸா ருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும் என்றும், அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றிருக்கலாம் என்பது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்