Rock Fort Times
Online News

தந்தை இறந்த நிலையிலும் மன உறுதியுடன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்…!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வேட்டையன் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45).இவர், பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாயல் இருந்த சரவணன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ( மார்ச் 15 ) சரவணன் உயிரிழந்தார். அங்கிருந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி மயானத்திற்கு இன்று (மார்ச் 16) கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், சரவணனுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனால், செய்வதறியாது திவகத்த மாணவனை உறவினர்கள் தேற்றி, தந்தையின் இறுதி சடங்குகளை செய்வதற்கு உறுதுணையாக இருந்தனர். பின்னர் தந்தையின் இறுதி சடங்குகளை முடித்து விட்டு மனதை திடப்படுத்திக் கொண்டு இன்று தேர்வு எழுத அந்த மாணவன் சென்றார். இந்நிகழ்வு உறவினர்கள் மற்றும் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்