பிரிந்தது பிரிந்ததுதான்… ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம்- * இபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்!
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அண்மையில் திமுகவிலும், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றி கழகத்திலும் இணைந்தனர். இதேபோல ஓபிஎஸ் உடன் இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் வேறு கட்சிகளில் சேர்ந்து விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த ஓ. பன்னீர்செல்வம் இன்று(29-01-2026) எஞ்சிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறேன், இதற்கு எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று பலமுறை தெரிவித்துவிட்டேன். “பிரிந்தது பிரிந்ததுதான், இணைவதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது” என்று பதில் அளித்தார்.

Comments are closed.