Rock Fort Times
Online News

தேர்தல் அறிக்கை தயாரிக்க த.வெ.க.வில் சிறப்பு குழு அமைப்பு: பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்க முடிவு…!

வருகிற சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார் விஜய். இதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிக்க விஜய் முடிவு செய்து இருக்கிறார். இதற்காக, டாக்டர் அருண்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ஜே. சி.டி.பிரபாகர் உள்பட 12 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழு, தமிழகம் முழுவதும் சென்று, பொதுமக்களை சந்தித்து கருத்துகள் மற்றும் தேவைகளை நேரடியாகக் கேட்டு அறிந்து, அதற்கான தரவுகளைச் சேகரிக்க உள்ளது. மேலும், சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற உள்ளன. இவ்வாறு அனைத்து தரப்பினரிடமிருந்தும் பெறப்படும் கருத்துகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டு மக்களையும், மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என விஜய் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்