செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென வெடித்து கீழே விழுந்து நொறுங்கியது. அதிக சத்தத்துடன் அந்த விமானம் வெடித்து கீழே விழுந்ததாக அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து வெடித்ததும் அதில் இருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், இந்த சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பயிற்சியில் ஈடுபட்ட சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாலையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.