குண்டும் குழியுமான சாலைகளால் தொடர் விபத்து ! திருச்சி, அரியமங்கலம் சுரங்கப்பாதையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 35 மற்றும் 16வது வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை மற்றும் வடக்கு உக்கடை சர்வீஸ் சாலையும், அதனை இணைக்கும் சுரங்கப் பாதை சாலையும் பல ஆண்டுகளாக மேடும் பள்ளமாக உள்ளது. இப்பகுதியில் தினந்தோறும் விபத்துக்கள் நடப்பதால் இச்சாலையை சீரமைக்ககோரி தேசிய நெடுஞ்சாலை துறையிடம் பலமுறை மனு கொடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்காவில்லை. இதனை கண்டித்தும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெற்கு உக்கடை செல்லும் சுரங்கப்பாதையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கிளை செயலாளர்கள் செல்வராஜ், சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், பாலக்கரை பகுதி செயலாளர் சுரேஷ், பகுதிக்குழு உறுப்பினர்கள் கனல் கண்ணன், பொன்மகள் உள்பட ஏராளமானார் கலந்துகொண்டனர். போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Comments are closed.