திருச்சி, ஸ்ரீரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி லட்சுமி (வயது 85). இவர் சம்பவத்தன்று வீட்டில் பூஜை அறையில் இருந்த விளக்கை ஏற்ற முயன்றார். அப்போது அவரது சேலையில் எதிர்பாராதமாக தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து மூதாட்டியை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.