Rock Fort Times
Online News

பா.ஜ.க மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட பார்வையாளராக ஏ.எஸ்.கார்த்திகேயன் நியமனம்…!

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு இளைஞர் அணி- மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள், துறை பொறுப்பாளர்கள் இணை பொறுப்பாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின்பேரில் இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதன்படி, மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட பார்வையாளராக ஏ. எஸ். கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த இவர், 2019-2022 வரை திருச்சி புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவராகவும், 2022-2025 வரை மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து உள்ளார். கட்சிக்காக அயராது பாடுபட்ட உண்மையான தொண்டருக்கு தற்போது புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது என உற்சாகம் பொங்க அக்கட்சியை சார்ந்த பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும் ஏ.எஸ்.கார்த்திகேயனை பொறுத்தவரை அனைவரிடமும், பண்பாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர். தான் சார்ந்த கட்சியின் கருத்தை, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படி, பொதுமக்களிடத்திலும், ஊடகங்கள் மத்தியிலும் அழுத்தமாக பதிவுசெய்யக்கூடிய திறமை படைத்தவர் என்றும் மகிழ்ச்சியாக கூறுகிறார்கள். அவருக்கு பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சால்வைகள் அணிவித்தும், பூச்செண்டுகள் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்