Rock Fort Times
Online News

வயலில் ஆடு மேய்ந்த தகராறில் ஆட்சியர் அலுவலக ஊழியர் மீது ரவுடி கொலைவெறி தாக்குதல்-திருச்சி சிட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார்…!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நில எடுப்பு பிரிவு சர்வே உதவியாளராக பணியாற்றி வருபவர் கலையரசன் (வயது 53). இவர், திருச்சி திருவானைக்காவல் கொண்டயம்பேட்டை கொள்ளிடக் கரையில் உள்ள தனது வயலில் நெல் சாகுபடி செய்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த ரவுடி மகாதேவன் என்பவரது ஆடு, இவரது வயலில் அடிக்கடி புகுந்து மேய்ந்து வந்தது. இதை தட்டிக்கேட்ட கலையரசனை, ரவுடி மகாதேவன் செங்கல்லால் அவரது முகத்திலும், கட்டையால் அவரது உடலிலும் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த கலையரசன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கலையரசன் கொடுத்த புகார் மீது ஸ்ரீரங்கம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதையடுத்து அவர் இன்று(11-01-2025) ரவுடி மகாதேவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி சிட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார்மனு அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்