கட்டுமான தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சங்க கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்…!
தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கருமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், அண்ணாதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக அரசின் கட்டுமான நல வாரிய தலைவரும், மத்திய சங்கத்தின் நிறுவனருமான பொன்.குமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு விபத்து மரண, இழப்பீட்டு தொகை 5 லட்சமாக இருந்ததை 8 லட்சமாக உயர்த்தி வழங்கியது. சென்னையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு முதியோர் இல்லம் கட்ட அனுமதி வழங்கியது. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பி.எச்.டி. பட்டப் படிப்பிற்கு ஒரு வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் விதம் 3 ஆண்டுகளுக்கு 45 ஆயிரம் வழங்கியது. தொழிலாளர்களுக்கு மருத்துவ அட்டை வழங்கியது போன்றவற்றுக்காக தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பொன்னுச்சாமி, சுவாமிநாதன், ஸ்ரீரங்கன், ஜெயராமன், மணிவேல், சீரான், சந்திரன், மணி, வெங்கடேசன், பிச்சை, செல்வம், சிவபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.