காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர், காரைப்பேட்டை பகுதியில் பிரபல மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ – மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பயிற்சி மருத்துவர்களும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஷெர்லின் (23) என்ற ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் பெண் பயிற்சி மருவத்துவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் நேற்று(01-09-2024) இரவு திடீரென மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஷெர்லின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பொன்னேரிக்கரை போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், “மாணவி ஷெர்லின் ஏற்கெனவே தனிப்பட்ட சொந்த விவகாரத்தில் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்துள்ளார். அதற்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.