திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது- மினி வேன் பறிமுதல்…!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வேங்கூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தினேஷ் (32) என்பவரின் வீட்டு முன்பு ஒரு மினி வேன் நின்று கொண்டிருந்தது. அந்த வேனில் போலீசார் சோதனை இட்ட போது 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தினேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அவற்றை பதுக்கி வைத்திருந்த வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல கடந்த 10ம் தேதி அரியமங்கலம் மற்றும் காட்டூர் பகுதியில் சுமார் 3500 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.