Rock Fort Times
Online News

திருச்சியில் நடந்து சென்றவரிடம் கத்தி முனையில் பணம் வழிப்பறி ! – 4 வாலிபர்கள்கைது

திருச்சி தெற்கு காட்டூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (வயது 53). இவர் திருச்சி மேலஅம்பிகாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், இவரை வழிமறித்து கத்தி முனையில் இவரிடமிருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரியமங்கலம் அம்மா குளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ராஜ் ( வயது 24), தெற்கு உக்கடையைச் சேர்ந்த அப்துல் கபூர் (வயது 29) மேல அம்பிகாபரத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 37 ),தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த ராஜேஷ் பைலட் (வயது 28) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து இரண்டு கத்திகள்,மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்