Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்…! ஜன. 8ம் தேதி நடக்கிறது!

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் ஜன. 8ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க 2026- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் வருகின்ற 08.01.2026 (வியாழக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் திருச்சி காஜா நகரில் உள்ள வி.எஸ்.திருமண மகாலில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தலைமை கழக பொறுப்பாளர்கள் வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் கேட்டு பெற உள்ளனர். அதுசமயம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொழில் முனைவோர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், நகர்நல சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்