முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு மே 4-ம் தேதி திருச்சி மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம்…* அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8, 9 தேதிகளில் திருச்சி வருகை தருகிறார். இதுதொடர்பாக திமுக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 08.05.2025 அன்று விமானம் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கலைஞர் அறிவாலயத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் மத்திய மாவட்ட கழகத்தின் அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம், வடக்கு மாவட்ட கழகத்தின் அவைத் தலைவர் எஸ்.ஏ.அம்பிகாபதி. தெற்கு மாவட்ட கழகத்தின் அவைத் தலைவர் பண்ணப்பட்டி.என்.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெறும். அதுசமயம் தெற்கு மாவட்ட கழக செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட கழக செயலாளர், முசிறி சட்டமன்ற உறுப்பினர். காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் க.வைரமணி ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். இக்கூட்டத்தில், மாநகர, நகர, பேரூர். ஒன்றிய கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.