Rock Fort Times
Online News

திருச்சி, சிறுகனூர் அருகே ஒயிட் பெட்ரோல் ஏற்றிவந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது- பெரும் விபத்து தவிர்ப்பு…! (வீடியோ இணைப்பு)

சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஒயிட் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது டேங்கர் லாரி டிரைவரும் பிரேக் பிடிக்கவே நிலை தடுமாறிய லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சென்னையைச் சேர்ந்த ரமேஷ் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் இந்த விபத்தினால் டேங்கர் லாரி சேதமடைந்து ஒயிட் பெட்ரோல் வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் டேங்கர் லாரி தீப்பிடிக்காத வண்ணம் அதன்மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததை தொடர்ந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் போலீசார் டேங்க் லாரியை அப்புறப்படுத்தினர். நல்ல வேளையாக லாரி கவிழ்ந்தவுடன் தீப்பிடிக்கவில்லை. இல்லையென்றால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்