Rock Fort Times
Online News

கரும்பு இயந்திரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு…!

ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு

குஜராத் மாநிலத்திலிருந்து கரும்பு அறுக்கும் இயந்திரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி தவறுதலாக வேறு சாலையில் சென்றதால் மீண்டும் திருச்சி மாநகர் வழியாக புதுக்கோட்டை சாலைக்கு செல்ல ஓட்டுனர் முயற்சி செய்தபோது திருச்சி மத்திய சிறைச்சாலை அலுவலகம் எதிரே சாலையோரம் இருந்த மின்சார கம்பம் ஸ்டே ஒயரில் லாரி உரசியதில் அங்கிருந்த மின் கம்பம் அடியோடு சாய்ந்தது.

இதன் காரணமாக மின் கம்பிகள் தீப்பொறியுடன் சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த சிறைச்சாலை அலுவலக காவலர்கள் மற்றும் லாரியின் பின்னே வந்த மாநகர காவல் வாகனத்தில் வந்த காவலர்கள் சுதாரித்து சாலையில் யாரும் செல்லாமல் தடுத்தனர். பின்னர் மின்சாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த கே.கே. நகர் போலீசார் , அந்த கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி சாலையோரம் நிறுத்தினர். பின்னர் மின்சாரத்துறை ஊழியர்கள் மின்கம்பத்தை சீரமைத்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக அந்த கனரக வாகன ஓட்டுனர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்