Rock Fort Times
Online News

5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரப்பளவில்… கண்களை கவரும் 7 அடுக்கு மாடிகளுடன்… திருச்சிக்கு வரப்போகும் பிரம்மாண்ட ஷாப்பிங் மால்…- பாரத் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் பணிகளை துவக்கியது..!

திருச்சி – சென்னை பைபாஸ், சஞ்சீவி நகர் அருகே ஏழு அடுக்கு மாடிகளுடன் 5 லட்சத்து 5 ஆயிரம் பரப்பளவில் திருச்சியின் முதல் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் பாரத் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் கட்டுமான துவக்க விழா இன்று ( நவம்பர் 16 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான பேராசிரியர் கே. எம்.காதர் மொய்தீன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பாரத் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிர்வாக இயக்குனர் எம்.நூர்முகமது வரவேற்றார். கிரடாய் அமைப்பின் திருச்சி மண்டல தலைவர் மனோகரன், விக்னேஷ் குழுமத்தலைவர் வி.கோபிநாத், திருச்சி சாரதாஸ் நிர்வாக இயக்குனர் எம்.ரோஷன், பிரபல ஆர்க்கிடெக்ட் கே.சேரலாதன், நெராக்கோ அமைப்பின் மாநில தலைவர் என்.ரவிச்சந்திரன், திருச்சி மண்டலத் தலைவர் எம்.கே.பி ஷாஜகான்,தொழிலதிபர் ஏ.ஜோசப் லூயிஸ், எஸ்.பி.ஐ வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் டி.வேலப்பன், இன்ஜினியர் எம்.சபியுல்லா, ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். திருச்சியில் அமையவிருக்கும் மால் குறித்து பாரத் கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக இயக்குனர் நூர் முகமது பேசியதாவது.,

“தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து துறைகளிலும் வளர்ந்துவரும் நமது திருச்சியில், ஷாப்பிங் மால் அமைக்க வேண்டும் என்பது நம் ஊர் மக்களின் பலநாள் கனவு. இதை மெய்ப்பிக்கும் வகையில் எங்களது நிறுவனம் சார்பில் சுமார் 5 லட்சத்து 5 ஆயிரம் சதுரடி பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக கமர்ஷியல் மால் அமைக்கப்பட உள்ளது. 3 அடுக்கு அன்டர் கிரவுண்ட் கார்பார்க்கிங் மற்றும் 7 தளங்களுடன் அமையவுள்ள இந்த மாலில் சினிமா தியேட்டர்கள், ஜிம், ஃபுட் கோர்ட், ஷாப்பிங் சென்டர்கள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றிருக்கும். அடுத்த 30 ஆண்டுகளுக்கான எதிர்கால சிந்தனையை கருத்தில் கொண்டு பல அதிநவீன வசதிகளுடன் இதை வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம். வருகிற 2029ம் ஆண்டுக்குள் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றார். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக இயக்குனரான நூர் முகமது தனது பேச்சின் ஆரம்பத்தில் இன்ஜினியராக தான் கடந்துவந்த பாதை, தொடக்கத்திலிருந்து தனது வளர்ச்சிக்கு உதவிய நபர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு அவர்களைப்பற்றி உருக்கமாக பேசியது வந்திருந்தவர்களை நெகிழ்வடையச் செய்தது. இந்நிகழ்ச்சியில் சாமி பில்டர்ஸ் எம். இளமுருகு, ஆலம் ஷெல்டர்ஸ் ஏ.பக்ருதீன், திருப்பதி ஸ்டீல்ஸ் திருப்பதி, ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆனந்த், திருவெறும்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என். சேகரன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.எம்.கருணாநிதி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், அரசு அதிகாரிகள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்