Rock Fort Times
Online News

திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிப்பு: தவெக நிர்வாகிகள் உட்பட 4 பேர் மீது வழக்கு…!

தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் சுற்றுப்பயணம் செய்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்று, பின்னர் திருவாரூருக்கு மாலை 3 மணியளவில் வருகை தந்தார். திருவாரூர் தெற்கு வீதியில் விஜயின் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக திருவாரூருக்கு வந்ததும், விஜயை வரவேற்கும் விதமாக கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து தவெக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அந்த மாலையை விஜய் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே, திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்து. பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் ஜே.சி.பி உரிமையாளர் மற்றும் தவெக நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்