ஆதார் கார்டில் திருத்தம் செய்ய முத்தான வாய்ப்பு- திருச்சி மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் 5 நாட்கள் சிறப்பு முகாம்…!
திருச்சி தென்னூர், லால்குடி, ராஜாஜி நகரில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக, திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட தென்னூர், லால்குடி, ராஜாஜி நகர் அஞ்சலகங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, 3 அஞ்சலகங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஏப்.1-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முகாம் நடைபெறும். ஆதார் புதிதாக எடுக்க கட்டணம் ஏதுமில்லை. குழந்தையின் அசல் பிறப்பு சான்று பெற்றோரது ஆதார் அட்டை அவசியமானது. பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் செய்ய ரூ.50, புகைப்படம் மாற்றம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்று, திருமணச் சான்று, ஓய்வூதிய சான்று, பிறப்பு சான்று, மதிப்பெண் சான்று, குடிநீர் வரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, தபால்நிலைய அடையாள அட்டை, ஆயுள் காப்பீடு சான்று, மின்கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒரு அசல் ஆவணம் கொண்டு வர வேண்டும். எனவே, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ஆதார் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.