திருச்சியில் காவலர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- சிட்டி கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார்…!
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று(01-02-2025) கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து காவலர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் ந.காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது காவல் துணை ஆணையர் (தெற்கு) , காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். இந்த விழிப்புணர்வு பேரணி உக்கிரகாளியம்மன் கோவில், கே.டி.சந்திப்பு, கலைஞர் அறிவாலயம், அண்ணாசிலை, பெரியசாமி டவர், சத்திரம்பேருந்து நிலையம், மெயின்கார்டுகேட், மரக்கடை, பாலக்கரை, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவு பெற்றது.
இதில், சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் 500 இருசக்கர வாகனங்களில் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் நாடகங்கள், பிரச்சாரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.