சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி…!* திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் தொடங்கி வைத்தார்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் காவல்துறை சார்பில் இன்று(08-03-2025) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பெண் காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் விதமாக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவிலிருந்து திருச்சி- சென்னை சாலை வழியாக மாருதி நகர் வரை சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி நம்பர் ஒன் டோல்கேட் ஒய் ரோடு சாலையில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் காவலர்களுக்கு எஸ்பி செல்வ நாகரத்தினம் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார், சமயபுரம் ஆய்வாளர் வீரமணி, கொள்ளிடம் துணை ஆய்வாளர் சேவியர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ADVERTISEMENT…👇
Comments are closed.