10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி !
பள்ளியில் நடத்திய பாடம் புரியவில்லையா ? தமிழக கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு...
தமிழக அரசும், தமிழக பள்ளி கல்வித்துறையும், மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. தமிழக பட்ஜெட்டிலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ், பாட புத்தகத்தில் கடினமான, முக்கியமான பகுதிகள் மற்றும் பொதுஅறிவு போன்றவை மாணவ- மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி, ஆசிரியர் குழுவினரின் கடின உழைப்பு, நல்ல திட்டமிடல் மூலம் வீடியோலேசன் செய்து TN-SCERT யூடியூபில் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் இதனை தயாரித்து வெளியிட்டுள்ளனர். ஆசிரியர் இல்லையென்றாலும் சாி , நடத்துவது புரியவில்லை என்றாலும் சாி, இதனை 5 முறை பார்த்தாலே போதும், தெளிவாக புரிந்து வீடும். இந்த வீடியோவை 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பார்த்து பயன் பெறுமாறு தமிழக கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.