திருச்சி, சிந்தாமணி பகுதி வெனிஸ் தெரு அருகே போதை மாத்திரை விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அப்பகுதியில் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நசுருதீன் (வயது26), அஜய் (26), முகமது அப்துல்லா ( 28 ), திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (27), சர்க்கார்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்கி (20), திருச்சி கீழ ஆண்டாள் வீதியைச் சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் (19) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அருண்பாண்டியன் ( 23) என்பது தெரிய வந்தது. அவர்கள் அங்கு போதை மாத்திரை விற்றதும் தெரிந்தது. இதையடுத்து அந்த 7 வாலிபர்களையும போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 290 போதை மாத்திரைகள் மற்றும் 10 ஊசிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.