திருச்சி அருகே ஓடும் பேருந்தில் இருந்து வாலிபரை கீழே தள்ளி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது பழிக்கு பழியாக தீர்த்து கட்டியது அம்பலம்…!
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் காந்தி நகரை சேர்ந்த கணபதி மகன் மதிர்விஷ்ணு (18). இவர் நேற்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கரை அருகே பேருந்து சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேரில் ஒருவர், பேருந்தில் ஏறி விஷ்ணுவை கீழே தள்ளினார். பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மதிர் விஷ்ணு தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மதிர்விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த
கொலை குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதிர் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்றவர்களை
தேடி வந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு கோகுல் என்ற நபரை விஷ்ணு தொடர்புடைய கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மதிர் விஷ்ணு சமீபத்தில் தான் ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில் இவரை நோட்டமிட்ட கும்பல் தான் நேற்று பழிக்குப்பழியாக இக்கொலையை செய்திருக்கிறது. இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் சகோதரர் ஆகாஷ் (23), அவரது 17 வயது சகோதரர் ஒருவர், மணிமாறன் வயது 22, 17 வயதுடைய 2 சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் இன்று(16-11-2024) காலை மணப்பாறையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோகுலை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமினில் வெளி வந்த மதிர் விஷ்ணு உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் வசிக்கும் பகுதிக்கு சென்று மீண்டும் மிரட்டியதால் ஆத்திரமடைந்த ஆகாஷ் உள்ளிட்ட 5 பேரும் மதிர் விஷ்ணுவை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.