ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன் மற்றும் திருச்சி ஜி.வி.என்.ரிவர்சைடு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்…!
ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன் மற்றும் திருச்சி ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் ஸ்ரீரங்கம் ரெங்க சாயி ஆலயத்தில் நடைபெற்றது. முகாமிற்கு, தொழில் அதிபர் அம்மையப்பா முரளிதரன் தலைமை தாங்கினார். சீரடி சாய் பவுண்டேஷன் டிரஸ்டி தலைவர் டாக்டர் கருணாநிதி முன்னிலை வகித்தார். ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் வி.ஜே.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புற்றுநோய் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். முகாமில் டிரஸ்டி நிர்வாகி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 72 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு முதல் கட்ட பரிசோதனை நடந்தது. ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேசன் சார்பில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை இது போன்ற முகாம் நடத்தப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவற்றுக்கு முறையான சிகிச்சை மேற்கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே புற்றுநோய் மருத்துவ முகாம் இலவசமாக நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Comments are closed.