Rock Fort Times
Online News

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் வாகனம் மோதி மாநகராட்சி ஊழியர் பலி!

திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 53). இவர் தற்போது கல்கண்டார் கோட்டை பகுதியில் வீடு கட்டி அங்கு சென்று விட்டார். இவர் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி செந்தண்ணீர் புரம் மேம்பாலம் அருகே மொபட்டில் சிவக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்