சாலையில் சுற்றித்திரிந்த மாடு மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவி படுகாயம்…! (பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சி)
திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 55 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கூட்ட நெரிசலான இடங்களிலும் அமைந்துள்ளது. இந்நிலையில் மாநகரப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பரபரப்பாக செல்லக்கூடிய சாலைகளில் மாடுகள் ஆங்காங்கே சுற்றி திரிகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கும் சூழல் உள்ளது. இந்தநிலையில் நெல்லை 55வது வார்டு திருமால் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கின்றன. இது போன்ற விபத்துகளை தடுக்க சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.