Rock Fort Times
Online News

வரன் தேடுவோருக்கு முத்தான வாய்ப்பு: ரெயின்போ கல்யாண மாலை நடத்தும் மெகா சுயவரம்- திருச்சியில் மார்ச் 9ம் தேதி நடக்கிறது…!

ரெயின்போ கல்யாண மாலை நடத்தும் மெகா சுயவரம் மார்ச் 9ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெமினா ஹோட்டல் எதிரில் சீனிவாசா ஹாலில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தாய்வீடு எஸ்.எம்.சிவக்குமார் தலைமையில் நடக்கும் இந்த சுயவரம் தொடர்ந்து மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில், தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட திருமண ஆலோசனை மையம் அமைப்பாளர்களை சந்தித்து உங்களுக்கு பொருத்தமான ஜாதங்களை பார்வையிட்டு தேவையான வரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதற்கான பதிவு கட்டணம் ரூ.250 ஆகும். மேலும் தகவல் தேவைப்படுவோர் 93632 64450, 81481 79456, 93857 01797 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  சுயம்வர நிகழ்ச்சி வெற்றி பெற இந்தியாவின் மாபெரும் தங்க மாளிகை மங்கள்& மங்கள், ராக்போர்ட் டைம்ஸ் தமிழ் வார இதழ், எஸ் டி.வி., குரு ஹோட்டல், காவேரி சூப்பர் மார்க்கெட், ஸ்ரீ சங்கீதாஸ் வெஜ் ரெஸ்டாரன்ட் மற்றும் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ், யூனிக்ஸ்ஷோ பான் பேபி கிப்ட் அண்ட் டாய்ஸ், 5 கே கார் கேர், கோல்டன் டெக்கரேட்டர், நியூ குறிஞ்சி வெஜ் ரெஸ்டாரன்ட் , விஎல் வித்யா மஹால் அவர்கள் ஆதரவுடன் திருச்சி ரெயின்போ அகாடமியின் ரெயின்போ கல்யாணமாலை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்