தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி நாமக்கல்லைத் தொடர்ந்து கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஹேம மாலினி எம்.பி தலைமையிலான குழுவினரை தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. எம்.பி ஹேமமாலினி தலைமையிலான குழு இன்று (செப்.30) கோவை வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கரூர் நோக்கி கார்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதில், ஹேம மாலினி பயணம் செய்த காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் அவர்கள் அதே கார்களில் புறப்பட்டு சென்றனர்.

Comments are closed.