திருச்சி கீழ சிந்தாமணி, அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன் (65). இவர் திருச்சி தெப்பக்குளம் அருகே சாலையோர வியாபாரியாக தலையணை மற்றும் ஆடைகள் விற்பனை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி, ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், மோகன் சிந்தாமணி பூசாரி தெரு அருகே மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.