திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நத்தம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்த செல்லதுரை மனைவி சுமதி (வயது 45). செல்லதுரை ஏற்கனவே இறந்து விட்டார். சுமதி விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சுமதி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் குளித்தலை சென்றுள்ளார். வீட்டில் அவரது மகள் மற்றும் மகன் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி விட்டு தப்பி ஓடி விட்டனர். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆதார் கார்டு மற்றும் பிற கார்டுகளையும் தூக்கி எரிந்துவிட்டு சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.