முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு. கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி ஈ.வெ.ரா. பெரியார் கல்லூரி வளாகத்திற்கு அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், அப்துல் சமத், ஸ்டாலின் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.