தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரெயில் முன்பதிவு … வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது
தென்னக ரெயில்வே அறிவிப்பு...
தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்க்கும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்புவர். அவர்கள் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு வருகிற 12-ம் தேதி தொடங்கும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.