கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவீந்திரநாத். இவர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார். இந்த வெற்றி முறைகேடானது, ஆகவே ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி வாக்காளா் மிலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, வேட்பு மனுவில் பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்துவிட்டதால் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது..

Comments are closed, but trackbacks and pingbacks are open.