சென்னை பத்திரபதிவு அலுவலகங்களில் 78 சார் பதிவாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மண்டலம் மாவட்ட பதிவாளர்கள் நேற்று மாற்றப்பட்ட நிலையில் இன்று 78 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் அலுவலகத்தில் ரூ.2000 கோடி அளவிற்கு வருவாய் பற்றிய தகவல்கள் மறைப்பு என வருமானவரித்துறை அளித்த புகாரையடுத்து, நேற்று சென்னை மண்டல சார் ஆட்சியர்கள் மாற்றப்பட்டதையடுத்து, இன்று சென்னை பத்திரப்பதிவு அலுவலகங்களில் 78 சார் பதிவாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: “தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட பதிவாளர்கள் மாற்றப்பட்டனர். தொடர்ந்து இன்று முதல் நிர்வாக காரணங்களுக்காக சென்னை மண்டலத்திற்குட்பட்ட 78 சார் பதிவாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது”

Comments are closed, but trackbacks and pingbacks are open.