திருச்சி உறையூர் சந்திரசேகரபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜெகதீஸ்வரன் ( வயது 16). திருச்சி கீழரண்சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ( 04.07.2023 ) இரவு 7 மணி அளவில் மாணவரின் தாய், சகோதரி ஆகியோர் வெளியே சென்றிருந்த நிலையில், ஜெகதீஸ்வரன் சேலையால் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவரது தாய், மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்த தகவலின்பேரில், உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெகதீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.